வீதியை புனரமைத்து தருமாறு கிராஞ்சி மக்கள் கவனயீர்ப்பு
#SriLanka
#Tamil People
#strike
#Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கிராஞ்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கிராஞ்சி அந்தோனியார் ஆலயத்திலிருந்து பேரணியாக கிராஞ்சி பொதுச்சந்தை வரை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த வீதி புனரமைப்பதற்கான பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் இடையிலே கைவிடப்பட்டிருக்கிறது .பல வருட காலமாக அபிவிருத்தி இன்றிய நிலையில் போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடுகின்றனர்.