மன்னாரைச் சேர்ந்த விவசாயிகள் குழு மகா இலுப்பள்ளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு களப்பயணம்

#SriLanka #Tamil People #strike #Lanka4
Kanimoli
2 years ago
மன்னாரைச் சேர்ந்த விவசாயிகள் குழு மகா இலுப்பள்ளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு களப்பயணம்

மன்னார் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் சூழல் பாதுகாப்புக் குழுவினால் விவசாயிகள் குழு ஒன்றை இன்றைய தினம் புதன் கிழமை(9) காலை மகா இலுப்பள்ளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

images/content-image/1691597570.jpg

 மன்னார் மாவட்டத்தின் வேப்பங்குளம்,மடுக்கரை,காத்தான் குளம்,பாலப் பெருமாள் கட்டு ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 45 விவசாயிகள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். -இதன் போது கூட்டுப்பசளை தயாரித்தல்,

images/content-image/1691597582.jpg

இயற்கை விவசாயம், புதிய இன விதைகள் கண்டுபிடிப்பது, விவசாய ஆராய்ச்சியின் முடிவுகள், ஆய்வு முறைகள் என பல்வேறு புதிய விடயங்களை பயனாளிகள் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1691597591.jpg

 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னர் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆகியோரின் அனுமதியுன் குறித்த கள பயணத்திற்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!