கொரிய ஜம்போரி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள்
#SriLanka
#SouthKorea
Prathees
2 years ago
கொரியாவில் நடைபெற்ற 25வது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொண்ட இலங்கை சாரணர் அணி சேமங்கம் ஜம்போரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
நாட்டைப் பாதிக்கப் போகும் கானுன் புயல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சியோலுக்கு அருகில் உள்ள சோனனில் உள்ள டாங்குக் பல்கலைக்கழகத்திற்கு இலங்கை சாரணர் குழு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சாரணர் குழு பாதுகாப்பாக தங்குமிடத்தை அடைந்துள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.