WC2023: இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது!
#world_news
#Pakistan
#India Cricket
#Cricket
#WorldCup
#match
#Tamilnews
Mani
2 years ago

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்., 14ம் தேதி மோத உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியானது. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்.,15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அன்றைய தினம் நவராத்திரி கொண்டாட்டம் துவங்குவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து நடந்த ஆலோசனைக்கு பின் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், போட்டியை ஒரு நாள் முன்னதாக அக்.14-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



