ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அடுத்த (2024) வருடத்தின் முதற்பாதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களுடன் முன்னெடுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன், மாகாணசபை தேர்தலை முதலில் நடத்தி அதில் பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.