ஓய்வு பெற்ற நபரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்து கொலை மிரட்டல் : பெண்ணொருவர் உட்பட மூவர் கைது
நாளிதழில் வெளியான திருமண விளம்பரத்தினையடுத்துஅறுபத்தேழு வயதான ஓய்வூதியதாரரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த பிறகு, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
தனது வங்கிக் கணக்கில் 69 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் 57 வயதுடைய பெண் உட்பட மூவரை நிட்டம்புவ பொலிஸார் நேற்று (06) கைது செய்துள்ளனர்.
தொட்டதால் மார்பில் உள்ள நரம்பு வெடித்துவிட்டதாகவும், அதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறி அந்தப் பெண் அவரிடம் இருந்து இந்தப் பணத்தை எடுத்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபர் உள்ளிட்ட மூவரும் கண்டி, அம்பிட்டிய மற்றும் பேராதனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வத்துபிட்டியலை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற நபர் தனது சட்டபூர்வமான மனைவியை விவாகரத்து செய்தவர் எனவும், தனது சகோதரர்களின் விருப்பத்திற்கிணங்க மறுமணம் செய்து கொள்வதற்காக பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
25 இலட்சம் ரூபா நிலையான வைப்புத்தொகை உள்ளதாக வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தில், கண்டி, கன்னோறுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பத்தேழு வயதுடைய பெண்ணொருவரே இவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுபவர் இரண்டு தடவைகள் அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண், முறைப்பாட்டாளரைச் சந்தித்த சில நாட்களில் அவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அவளைச் சந்தித்தபோது, அவளின் மார்புப் பகுதியை அழுத்தியதால் ஒரு நரம்பு வெடித்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு 30 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம் தராவிட்டால், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசில் முறைப்பாடு செய்யப்போவதாக மிரட்டியதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் அச்சுறுத்தலுக்கு பயந்த ஓய்வுபெற்ற நபர், ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாவை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணம் வரவு வைக்கப்பட்ட சில நாட்களில், சந்தேக நபர் முறைப்பாட்டாளரைப் பயமுறுத்தி 39 இலட்சம் ரூபாவை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே தொகையை வரவு வைத்துவிட்டு, 25 லட்சம் ரூபாய் மோதிரத்தை வரவு வைக்குமாறு சந்தேக நபர் மிரட்டியுள்ளார்.
கொடுக்காததால் இரண்டு பேர் முறைப்பாட்டாளருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் நிட்டம்புவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பெண் சந்தேக நபரையும் ஏனைய இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் முதியவர்களை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிப்பவர்கள் இவர்கள் என பொலிசார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.