மத்திய வங்கிக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர்கள் பிணையில் விடுதலை!
#SriLanka
#Central Bank
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (09.08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 10 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த பிணை உத்தரவை வழங்கிய நீதிமன்றம், சந்தேகநபர்கள் அரச நிறுவனத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளது.