கொழும்பில் அதிகரித்து வரும் தொழுநோயாளர்கள்!

#SriLanka #Colombo #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பில் அதிகரித்து வரும் தொழுநோயாளர்கள்!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. 

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க,  கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  "உண்மையில், இந்த நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சுமார் 3-5 ஆண்டுகள் ஆகும். பலரின் உடலில் இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக இருக்கும். இருப்பினும் பெரும்பாலும் நோய் நிலைமை இனங்காணப்படுவதில்லை. 

காரணம் இது மற்ற நோய்களைப்போல அரிப்பு, வலி ஏற்படுவதில்லை.  ஒரு கூச்ச உணர்வு மட்டுமே உள்ளது. இதைப் பொருட்படுத்தாமல், தினசரி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதை நீண்ட காலத்திற்கு கவனிக்காமல் இருக்கும்போது பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன.  விரல்கள் உதிர்ந்து காயங்கள் ஆறாத நிலையில், மக்கள் இதற்கு சிகிச்சை பெற முனைகிறார்கள்” எனத் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!