திருமண வைபவ மின்சார கட்டண விவகாரம்: வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! நாமல் எச்சரிக்கை
#SriLanka
#Namal Rajapaksha
#Electricity Bill
Mayoorikka
2 years ago
தனது திருமண வைபவத்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான பணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், நிலுவையிலுள்ளதாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.