மல்லி களஞ்சியசாலையில் சுற்றிவளைப்பில் பழுதடைந்த 84875 கிலோ மல்லி கண்டுபிடிப்பு

#SriLanka #Arrest #Police #Ampara #Food
Prasu
2 years ago
மல்லி களஞ்சியசாலையில் சுற்றிவளைப்பில் பழுதடைந்த 84875 கிலோ மல்லி கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு உகந்ததல்லாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்னவின் வழிகாட்டலின் படி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உகந்ததல்லாத பழுதடைந்த 84875 கிலோ மல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் என்பன பதுக்கி வைக்கப்பட்டிருந்த வர்த்தக களஞ்சியசாலையிலேயே இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

குறித்த களஞ்சியசாலையில் நேற்று (8) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மனித பாவனைக்கு உதவாத மல்லி நிறச்சாயம் இட்டு விற்பனை செய்வதற்கு தயார் படுத்தபட்டு களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்த மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது, 44 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை , குறித்த களஞ்சியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு எச்சரிக்கையுடனான அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

 அம்பாறை மாவட்டத்தில் மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!