வடக்கு கிழக்கு சிறுபான்மையினர் தொடர்பில் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை: விமல் வீரவன்ஸ

#SriLanka #Sri Lanka President #Wimal Weerawansa #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
வடக்கு கிழக்கு சிறுபான்மையினர் தொடர்பில் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை: விமல் வீரவன்ஸ

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறினார்.

 முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதாகக் கூறினார்.

 ஆனால், அந்த மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியவில்லையா? யாழ். திஸ்ஸ விகாரையில் சமயக்கிரியைகளில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டது. 

குந்துர்மலையில் பிரச்சினை உள்ளது. வடக்கு – கிழக்கில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்கள் எவ்வளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் தெரியுமா? எனவே, ஒரு தரப்பினரின் பிரச்சினைகளை மட்டும்பார்க்காமல், அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!