நடைமுறைக்கு வரும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்! பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

#SriLanka #Sri Lanka President #Parliament #speaker
Mayoorikka
2 years ago
நடைமுறைக்கு  வரும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்! பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (8) கையொப்பத்தையிட்டு சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். 

 இதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக 2023 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

 இந்தச் சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

 நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் 2023 ஏப்ரல் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

 இதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக செவ்வாய்க்கிழமை (8) முதல் நடைமுறைக்கு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!