சூடானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சூடானில் அதிகரித்து வரும் மோதல்களால் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் 884,000 க்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் ஸ்பிண்ட்லர் கருத்துப்படி, சண்டை, தொற்றுநோய்களின் தாக்கம், மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மே நடுப்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை, UNHCR ஆனது தட்டம்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 300 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்துள்ளதாகவும், முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



