கிருலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கிருலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.எம்.கொலம்பகே மாவத்தை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நுகேகொடையில் இருந்து நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர், சுமார் 05 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.