வட்ஸ் அப் ஊடாக பாலியல் சேட்டை-சமூர்த்தி அதிகாரிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

#SriLanka #Arrest #Police #Court Order #Lanka4 #Whatsapp
Kanimoli
2 years ago
வட்ஸ் அப் ஊடாக பாலியல் சேட்டை-சமூர்த்தி அதிகாரிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (8)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான சாய்ந்தமருது 4 ஆம் பிரிவினை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் நழீம் (வயது-45 ) என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 கடந்த திங்கட்கிழமை (7)அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் தையல் மெசின் உட்பட பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து வட் அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வருவதாக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

images/content-image/1691553053.jpg

 இதற்கமைய சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்திருந்தனர்.

 மேலும் சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு பல்வேறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!