100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த நியூசிலாந்து திட்டம்: ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் இந்தப் பிரச்சினையைத் தணிக்க பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகின்றன. நியூசிலாந்து அரசாங்கம் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார்.
இந்த கூட்டாண்மை மின்சாரத்தை உருவாக்க காற்று, பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனையடுத்து, குறிப்பிட்ட திட்டத்திற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



