ஜனாதிபதி இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09.08) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றவுள்ள வாய்மூல வினா அமர்வின் பின்னர் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சர்வகட்சி மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.