கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை அதிகரிப்பு

இந்தியா ஆண்டுக்கு 10.8 கோடி டன் கோதுமையை பயன்படுத்துகிறது, ஆனால் உற்பத்தியில் வேறுபாடுகள் உள்ளன. இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்ததை விட 10 சதவீதம் குறைந்துள்ளதால், சந்தைகளில் கோதுமை வரத்து குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்து இருக்கிறது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் சந்தையில் மொத்தவிலை கிலோவுக்கு ரூ.28 வரை இருந்திருக்கிறது.
இதனால், கோதுமை விலையை கட்டுப்படுத்தவேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோதுமை விலையை குறைக்கும் வகையில், கோதுமை மீதான 40 சதவீத இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதுமை விலை உயர்வு தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



