பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், 56 மதகுமார்கள் சிறையில் உள்ளனர்!
பல்வேறு மதங்களைச் சேர்ந்த குறைந்தது 56 மதகுருமார்கள் பல்வேறு குற்றங்களுக்காக தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பல்வேறு குற்றச்செயல்களுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் சிறையில் உள்ளனர். குருமார்களில் பத்தொன்பது பேர் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்,
மேலும் நான்கு பேர் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் கற்பழிப்புக்காகவும், ஐந்து பேர் கொலை தொடர்பாகவும், மூன்று பேர் நிதிக் குற்றங்களுக்காகவும், மூன்று பேர் புதையல் வேட்டையாடிய சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இருவர் கடுமையான பாலியல் குற்றங்களுக்காகவும், ஒருவர் சிறுவரை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று இலங்கையிலுள்ள மதகுருமார்கள் மரியாதையை இழக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.