கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் நிதி!
#SriLanka
#Sri Lanka President
#Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.பிரதீபன் தலைமையில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து நாளை மறுதினம் குறித்த பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து அகழ்வுப்பணிக்கான திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்தார்