ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுகின்றோம் - பிரசன்ன ரணதுங்க

#SriLanka #Lanka4 #srilankan politics #pirasanna ranathunga
Kanimoli
2 years ago
ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுகின்றோம் - பிரசன்ன ரணதுங்க

ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளம்முறிப்பு, கச்சிலைமடு, கதலியாறு மற்றும் ஒலுமடு ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இன்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும்,

 கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செலவிடப்பட்ட தொகை 205 மில்லியன் ரூபாவாகும். நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும் போது நீரிலிருந்து அதிக உப்புகள் அல்லது இருவேறு கூறுகளை நீக்குகிறது. மேலும், நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுகள், கன உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!