பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவது மரணத்தை வரவழைக்கிறது
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தும் தொடர்ச்சியான நடைமுறை உங்கள் மரணத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
குடிநீருக்காக ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்தும் தொடர்ச்சியான நடைமுறையானது மக்களை அவர்களின் மரணத்திற்கு கொண்டு செல்லும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) செயலாளர் டொக்டர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய, பிளாஸ்டிக் #1 (PET அல்லது PETE என அழைக்கப்படும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட்) மூலம் தயாரிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான ஒரு போக்கு மீண்டும் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளதாக இதனைத் தெரிவித்துள்ளார்.
போத்தலில் உள்ள ரசாயனங்கள் தண்ணீருடன் கலக்கும் வாய்ப்புகள் இருப்பதால், இந்த போத்தல்களில் உள்ள தண்ணீர் அதன் சீல் உடைந்த பிறகு நேரடியாக சூரிய ஒளியில் படுவதற்கு ஏற்றதல்ல.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதால், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
எனவே குடிநீருக்கு பரிந்துரைக்கப்பட்ட போத்தல்களை மாத்திரம் பயன்படுத்துமாறு வைத்தியர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.