PT6 பயிற்சி விமானங்கள் தற்போதும் ஏன் பயன்படுத்தப்படுகின்றன? - தயாசிறி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
PT6 பயிற்சி விமானங்கள் தற்போதும்  ஏன் பயன்படுத்தப்படுகின்றன? - தயாசிறி!

இலங்கை விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

விமான விபத்து குறித்து நாடாளுமன்றில் இன்று (08.08) கருத்து வெளியிட்ட அவர்,  இந்த விமானங்கள் 1958-ல் தயாரிக்கப்பட்டு, இன்னும் பைலட் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவது ஏன் என்றும்  கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற பழமையான விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது என்றும், அவற்றை பயிற்சிக்காக அல்ல, அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காஃபிர் போர் விமானங்களை பழுதுபார்ப்பதற்கு அரசாங்கம் 55 மில்லியன் டொலர்களை செலவிட்ட நிலையில், இந்த விமானங்களுக்கு ஏழரை இலட்சம் டொலர்கள் மட்டுமே செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!