பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்! 7 பேர் பலி

#India #world_news #Attack #Pakistan #BombBlast #Terrorist #Tamilnews #Bomb
Mani
2 years ago
பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்! 7 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது.

இதில் வாகனம் வெடித்து சிதறி சுக்குநூறானது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதில் யூனியன் கவுன்சில் தலைவர் இஷ்தியாக் யாகூப்பும் அடங்குவார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பஞ்ச்கூரில் இருந்து துணை கமிஷனர் அம்ஜத் சோம்ரோவ் கூறுகையில், திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது, பல்கத்தார் யூனியன் தலைவர் இஷ்தியாக் யாகூப் மற்றும் சிலரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் அவர்களது வாகனத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பால்கதர் பகுதி வழியாக வாகனம் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில், கடந்த 2014ல் நடந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பலூச் விடுமுறை முன்னணி பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!