உதைபந்தாட்ட போட்டியின் போது தாக்கிய சம்பவம்:5 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்
#SriLanka
#Court Order
#Lanka4
#football
#sports
Kanimoli
2 years ago
பாடசாலை உதைபந்தாட்ட போட்டியின் போது பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெஸ்லி கல்லூரிக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் முடிவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.