கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீவிபத்து : ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#Lanka4
#fire
Thamilini
2 years ago
கந்தானை பிரதேசத்தில் இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று (08.08) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் போது, நிறுவனத்தின் கணக்காளர் களஞ்சியசாலைக்குள் இருந்ததால், அவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.