19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த நபர்: ஊர் மக்களின் தாக்குதலில் உயிரிழப்பு

#SriLanka #Jaffna #Death #Police #Attack #Crime
Mayoorikka
2 years ago
19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த நபர்: ஊர்  மக்களின் தாக்குதலில் உயிரிழப்பு

19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

 குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 5 ஆம் திகதி குளிப்பதற்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதியை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில், மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி, இருவரும் நேற்றைய தினம் (07) ஊருக்கு வந்த போது 55 வயதுடைய நபர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

 தாக்குதலில் படுகாயமடைந்த நபரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, இடை வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 குறித்த யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

images/content-image/2023/08/1691482011.jpg

images/content-image/2023/08/1691481992.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!