அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நீர் விநியோகம் தடைப்படும்

#SriLanka #water #Lanka4
Kanimoli
2 years ago
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நீர் விநியோகம் தடைப்படும்

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, மத்துகம, அகலவத்தை இணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 அதன்படி, காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் தண்ணீர் விநியோகம் தடைப்படும். அத்துடன், வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தவிர, பயாகல, பொம்புவல, மக்கொன, தர்கா நகர், அளுத்கம, பிலமினாவத்தை, களுவாமோதர, மொரகல்ல ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!