அலாஸ்கா கடற்கரைக்கு அருகில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட முக்கிய நாடுகள்!

#world_news #Russia #Lanka4
Dhushanthini K
2 years ago
அலாஸ்கா கடற்கரைக்கு அருகில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட முக்கிய நாடுகள்!

அலாஸ்கா கடற்கரைக்கு அருகில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி மேற்கொண்ட நிலையில், அதற்கு அமெரிக்கா ஆக்கிரோஷமாக பதிலளித்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. 

பதினொரு ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் அலாஸ்கா கடற்கரையில் உள்ள அலூடியன் தீவுகளை நெருங்கியதாகவும், ஆனால் கடற்படை அமெரிக்க கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது. 

உக்ரைன்  போர் மற்றும் தைவானைச் சுற்றியுள்ள பதட்டங்களின் பின்னணியில், இந்த நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது,” என  ஹெரிடேஜ் அறக்கட்டளையின் மூத்த ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கடற்படை கேப்டனுமான ப்ரெண்ட் சாட்லர் தெரிவித்துள்ளார். 

இந்த பயிற்சிக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா,  நான்கு அமெரிக்க நாசகார கப்பல்களையும் P-8 Poseidon விமானங்களையும் அனுப்பியதாக அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், “சீன மற்றும் ரஷ்ய ராணுவத்தினருக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்புத் திட்டத்தின்படி, இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் சமீபத்தில் மேற்கு மற்றும் வடக்கு பசிபிக் கடல் பகுதியில் கூட்டுக் கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!