சமனல ஏரியில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கான நீர் திறந்து விடப்பட்டுள்ளது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு இன்று (08.08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என .சானக்க தெரிவித்தார். நாளொன்றுக்கு 3.5 மில்லியன் கனமீற்றர் நீர் திறந்துவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி வளவ பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மிக மோசமான வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில், உடவலவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ளது.
217,800 ஏக்கர் அடி மொத்த நீர் கொள்ளளவைக் கொண்ட உடவலவ நீர்த்தேக்கத்தின் வினைத்திறன் நீர் கொள்ளளவு நேற்று (07) காலை 956 ஏக்கர் அடியாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.