சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

#India #world_news #Attack #Tamilnews #Breakingnews #Killed
Mani
2 years ago
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் இன்று (07) அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிரியா பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகின்ற நிலையில் சிரிய அதிபர் பஷீர் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

உள்நாட்டுப்போரில் அதிபர் அசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகின்றது, அத்துடன் ஈரான் ஆதரவு குழுவினர் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் சிரியா - இஸ்ரேல் எல்லையோரம் இருந்தவாறு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை தடுக்க சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான் சிரியாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!