கெக்கிராவ பிரதேச செயலகத்தில் வெடிப்பு சம்பவம்
#SriLanka
#BombBlast
Prathees
2 years ago
கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலாளரின் மலசலகூடத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடிவிபத்தில் பிரதேச செயலாளருக்கோ அல்லது அவரது பணியாளர்களுக்கோ காயம் ஏற்படவில்லை,
இந்த வெடிவிபத்தில் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சொந்தமான மலசலகூடத்தின் பாகங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது சேவைகளை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் அலுவலக வளாகத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.