50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனுக்கு விண்கலம் ஒன்றை ஏவும் ரஷ்யா!
#SriLanka
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது.
இதன்படி லூனா -25 என்ற லேண்டரை ஏவவுள்ளதாகவும், இதற்காக சோயுஸ் என்ற ரொக்கெட்டை பயன்படுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
1976 க்குப் பிறகு மொஸ்கோவின் முதல் சந்திரப் பயணமாக இது இருக்கும் எனவும், இந்த விண்கலம், வரும் 11 ஆம் திகதி ஏவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



