அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் மாயம்!
#SriLanka
#Australia
#Lanka4
#Missing
Thamilini
2 years ago
அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திஷாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
18 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.