13 ஆவது திருத்தம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தயார் - சி.விக்னேஸ்வரன்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
13 ஆவது திருத்தம் குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த அக்கறையும் இல்லை எனவும், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என எவரேனும் கூறினால் அது கட்டுக்கதை எனத் தெரிவித்த விக்னேஸ்வரன், பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றி அறிக்கையொன்றை வெளியிடத் தயார் எனவும் கூறினார்.