15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்! தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்ட அறிவிப்பு

#SriLanka #water #Lanka4
Kanimoli
2 years ago
15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்! தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 அளுத்கம, மத்துகமை, அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாதுவை, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, போம்புவல, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, தர்காநகர், அளுத்கமை, களுவாமோதர, மொரகல்ல, பிலம்னாவத்த மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!