அரச குடும்பத்து இளவரசரின் காதலியை காதலித்ததால் வசீம் தாஜுதின் உயிரிழந்தார்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வசீம் தாஜுதீன் காரில் வைத்து எரித்து கொல்லப்பட்டதாகவும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக இருந்த அவரது எலும்புகளும் காணாமல்போயுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனருவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அரச குடும்பத்து இளவரசர் ஒருவரின் காதலியை தாஜுதீன் காதலிக்க முயற்சித்ததே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது தொடர்பான வழக்குக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.