இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைமையாக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமிப்பு
#Lanka4
#Cricket
#sports
#Sports News
Kanimoli
2 years ago

எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைமையாக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. அடுத்த ஆண்டு 2020 உலகக் கிண்ணத்திற்கான ஆஸ்திரேலிய அணியின் தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மூன்று புதிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் ஆரோன் ஹார்டி மற்றும் மேட் ஷார்ட் ஆகியோர் அந்த வீரர்கள். இந்தியாவில் வரும் அக்டோபரில் தொடங்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மிங்ஸ் வழிநடத்த உள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த அணியின் தலைவராக மார்ஷ் இருப்பார் என கருதப்படுகிறது.



