இலங்கை விமானப் படை விமானம் விபத்து! இருவர் உயிரிழப்பு

#SriLanka #Flight #AirCraft
Mayoorikka
2 years ago
இலங்கை விமானப் படை விமானம் விபத்து! இருவர் உயிரிழப்பு

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானது என இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.

 விமான சோதனைக் கடமைகளுக்காக அங்கு பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 இந்த விபத்து சீனக்குடா முகாம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

 இலங்கை விமான படையின் சீனக்குடா பொறியியல் பீடத்தில் இலக்கம் 1 பயிற்சி தளத்தில் விமானிகளை பயிற்சியளிக்க பயன்படுத்தப்பட்ட PT 6 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

 திங்கட்கிழமை (07) காலை 11.25 க்கு புறப்பட்ட விமானம், 11.27க்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விமானிக்கான பயிற்சியை பயின்றவர் மற்றும் பொறியியல் அதிகாரி ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது,

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!