கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா

#SriLanka #School #Event #Lanka4
Kanimoli
2 years ago
கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா

கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா நேற்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் தலைமுறையை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும், விளையாட்டுத் திறணை விருத்தி செய்யும் வகையிலும் குறித்த விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

images/content-image/1691384571.jpg

 உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்து, கரம், பற்பின்னல் என பல்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த விளையாட்டு விழாவில் பெருமளவான இளைஞர் யுவதிகள் போட்டிகளில் ஆர்வத்துடன் தமது கழகங்கள் ஊடாக கலந்து கொண்டனர். இறுதி பரிசளிக்கும் நிகழ்வான நேற்றைய நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. 

images/content-image/1691384585.jpg

இதன்போது விருந்தினர் வரவேற்கப்பட்டு ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து, கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கூடைப்பந்து போட்டிகளின் இறுதி போட்டிகள் மைதானத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து பதக்கங்களும், கேடயங்களும், பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. கிளி பீப்பிள் எனும் மக்கள் அமைப்பினால் பெருந்தொகை நிதியில் குறித்த விளையாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பாடசாலை அதிபர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

images/content-image/1691384599.jpg

images/content-image/1691384619.jpg

images/content-image/1691384634.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!