மொராக்கோவில் பேருந்து விபத்து : 24 பேர் உயிரிழப்பு!
#Accident
#world_news
#Bus
#Lanka4
Dhushanthini K
2 years ago

மத்திய மொராக்கோவில் உள்ள அசிலால் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்த விபத்தில் சிக்கி குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று (07.08) இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான விபத்துக்களில் இதுவும் ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மொராக்கோவில் உள்ள டெம்னேட் என்ற சிறிய நகரத்தில் உள்ள வாராந்திர சந்தைக்கு செல்லும் பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



