இலங்கையில் அதிர்ச்சி : முச்சக்கர வண்டியில் பயணித்த ஆவி!
தென்னில்ஙகையில் முச்சரவண்டியில் ஆவி ஒன்று பயணித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரக்வான பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தனியாக வசித்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 05 ஆம் திகதி இரவு ஏழு மணியளவில், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சகர வண்டியில் கையில் செய்திதாள்களுடன் உயிரிழந்த குறித்த நபர் ஏறியதாக கூறப்படுகிறது.
அவருடைய வீட்டில் விடுமாறு சாரதியிடம் கூறியதாகவும், குறித்த வீடு வந்தவுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த அவர், திடீரென காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முச்சகர வண்டி சாரதி பணம் கேட்க முற்பட்டபோது அவர் காணாமல்போயிருந்தது தெரியவந்துள்ளளது. இந்நிலையில் குறித்த சாரதி தனது நண்பரிடம் தான் ஒரு சவாரி செய்ததாகவும், ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் அரச உத்தியோகத்தர் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே குறித்த அரச உத்தியோகத்தர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த விடயத்தை நண்பன் கூறியதாக முச்சக்கர வண்டியின் சாரதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரக்வான பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.