வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!

#SriLanka #Vavuniya #Prison #Lanka4
Thamilini
2 years ago
வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

சிறைச்சாலையில், அம்மை நோய் பரவியதன் காரணமாக மற்றவர்களுக்கும் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்றுடன் (07) முடிவடைய உள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. 

 அதன்படி நாளை (08) முதல் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!