வறட்சியினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுமாறு அறிவுறுத்தல்!

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4
Thamilini
2 years ago
வறட்சியினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுமாறு அறிவுறுத்தல்!

வறட்சியினால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களின் நிலையை மதிப்பிடும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு விவசாய அமைச்சர்  மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். 

அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இது குறித்தஅறிவித்தல், அமைச்சர் சபையின் தலைவர் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர ஆகியோருக்கு வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

பயிர் சேதத்திற்கான இழப்பீடாக ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கினாலும் போதாது என அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 கடந்த வருடம் பயிர் சேதத்திற்காக 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் அது அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த அமரவீர, இந்த வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளோம்.

அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து காப்புறுதி சபையின் ஊடாக இழப்பீடு வழங்க எதிர்பார்த்துள்ளோம். தற்போது 100,000 ரூபா நட்டஈடு வழங்க முடியும். ஒரு ஹெக்டேருக்கு, ஆனால் சில பகுதிகளில் நிலைமை வேறு. நாங்கள் முயற்சி செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!