பங்களாதேஷில் டெங்கு தொற்றின் தாக்கம் உச்சத்தை தொட்டது!

#world_news #Lanka4 #Bangladesh #Dengue
Dhushanthini K
2 years ago
பங்களாதேஷில் டெங்கு தொற்றின் தாக்கம் உச்சத்தை தொட்டது!

பங்களாதேஷில் டடெங்கு காய்ச்சலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. 

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் இதுவரை குறைந்தது 293 பேர் டெங்கு காய்ச்சல் காரணமா உயரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 61,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணாக புதிய நோயாளிகளுக்கு சிகிச்சையை வழங்குவதற்கான படுக்கைகளை ஒதுக்கிக்கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். 

குறிப்பாக தலைநகர் டாக்காவில், அதிக காய்ச்சல், மூட்டு வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு பரவும் அபாயங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் தாக்கம் குறையவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!