வீடொன்றில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Cannabis
Prathees
2 years ago
வீடு ஒன்றில் பூந்தொட்டியில் கவனமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடியுடன் சந்தேகநபர் ஒருவரை ஹட்டன் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகநபர் ஹட்டன் தரவளை தோட்டத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டனர்.
இதன் போது பூந்தொட்டியில் கஞ்சா செடியை கவனமாக நட்டுள்ளதாகவும் இது 2½ அடிக்கும் அதிகமாக இருந்ததாக சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.