கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் காடுகளை இழந்துள்ள இலங்கை
#SriLanka
#environment
Prathees
2 years ago
கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலைக்கு காடுகள் அழிக்கப்படுவதே பிரதான காரணம் என அதன் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வன அழிவினால் நாட்டில் உள்ள பல நீர் ஊற்றுகள் வற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி காடுகளை அழிக்கும் குழுக்களை அதிகாரத்தில் அமர்த்துவதன் பலனை தற்போது மக்கள் அனுபவித்து வருவதாக இயற்கை ஆய்வு நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் மேலும் தெரிவித்தார்.