யால மற்றும் உடவளவ பூங்காக்களை மூடுவதற்கு இன்று தீர்மானம்
#SriLanka
#National Park
#closed
Prathees
2 years ago
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவளவ மற்றும் யால பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உடவளவ மற்றும் யால பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது தொடர்பில் கலந்துரையாடலின் போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ மற்றும் யால பூங்காக்களை மூடுமாறு ஏற்கனவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.