சுகாதார கொள்கையை உருவாக்க முன்னாள் சுகாதார அமைச்சர்களுடனும் கலந்துரையாட வேண்டும்!

#SriLanka #Health #Keheliya Rambukwella #Lanka4
Thamilini
2 years ago
சுகாதார கொள்கையை உருவாக்க முன்னாள் சுகாதார அமைச்சர்களுடனும் கலந்துரையாட வேண்டும்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புதிய சுகாதார கொள்கையை உருவாக்குவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர்களுடன் சந்திக்க வேண்டும் எனவும், அதற்கு  அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

“ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் பல எம்.பி.க்கள் சுகாதார அமைச்சர் பதவியை வகித்துள்ளனர். இதில் மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, ஏ.எச்.எம். பௌயிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கடந்த காலங்களில் இலாகாவை வகித்துள்ளனர். 

சுகாதார இராஜாங்க அமைச்சர்களாக இருந்த சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சீதா அறம்பேபொல போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரன் எரான் விக்கிரமரத்ன தெரித்துள்ளார். 

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த எம்.பி.க்கள் சுகாதார கொள்கை குறித்து விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறிய அவர்,  அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கல்வி தொடர்பான கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!