மூன்று மாதங்களுக்குள் கப்பல் சேவை: உறுதியளித்த அமைச்சர்
#India
#SriLanka
#Ship
Mayoorikka
2 years ago
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கான பயணிகள் கப்பல் சேவையை இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தலைமன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் தலைமன்னார் துறைமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டுள்ளார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.